< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
சோனியா காந்தியை அமலாக்கத்துறையினர் விசாரிப்பதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம்
|27 July 2022 10:13 AM IST
சோனியா காந்தியை அமலாக்கத்துறையினர் விசாரிப்பதை கண்டித்து தண்டையார்பேட்டை தலைமை தபால் நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
`நேஷனல் ஹெரால்டு' வழக்கில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறையினர் பல கட்டங்களாக விசாரணை கடத்தி வருகின்றனர். இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் அனைத்து பகுதிகளிலும் சத்தியாகிரக அமைதி வழி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதில் ஒரு கட்டமாக வட சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று தண்டையார்பேட்டை தலைமை தபால் நிலையம் அருகே வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ். திரவியம் தலைமையில் சத்தியாகிரக அமைதி வழி போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் கோபண்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் உள்பட காங்கிரஸ் கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் அமலாக்கத்துறையை கண்டித்தும், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.