< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல்
|16 April 2023 10:07 PM IST
போளூரில் காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை கண்டித்தும் போளூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ெரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி. தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
ரெயில் மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.