< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல்; 150 பேர் கைது
|15 April 2023 10:13 PM IST
ஆம்பூரில் ரெயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரபு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆம்பூர் ரெயில் நிலையத்தில் ெரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம்பூர் டவுன் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் ெரயில் மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்து ஆம்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.