< Back
மாநில செய்திகள்
அக்னிபத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சென்னை
மாநில செய்திகள்

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
28 Jun 2022 12:40 PM IST

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் திருவள்ளூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் வக்கீல் ஜான் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் ஆனந்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இக்கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

இதேபோல் பள்ளிப்பட்டு காந்தி சிலை முன்பு அக்னிபத் திட்டத்தை கண்டித்து காங்கிரசார் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கட ராஜூ தலைமை தாங்கினார். நகர தலைவர் சிவகுமார் முன்னிலை வகித்தார். இதில் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மீஞ்சூர் பஜாரில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மீஞ்சூர் நகர காங்கிரஸ் தலைவர் துரைவேல்பாண்டியன் முன்னிலை வகித்தார். பொன்னேரி நகர காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் சதாசிவலிங்கம், ஆரணி பேரூராட்சி துணை தலைவர் சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்