< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

மயிலாடுதுறையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
24 March 2023 12:15 AM IST

ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி குறித்து தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தவறாக பேசியதாக சூரத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதனை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் ராமானுஜம் தலைமை தாங்கினார். பா.ஜ.க.வையும், பிரதமர் மோடியையும் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாநில செயலாளர் கோவி.மதிவாணன், வட்டார தலைவர் ராஜா, தலைமை பேச்சாளர் அப்துல்ஹாஜி, நகர செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்