கன்னியாகுமரி
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கடை:
ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை நீக்கம் செய்ததை கண்டித்தும், மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் காப்புக்காடு சந்திப்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு விளாத்துறை காங்கிரஸ் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். முன்சிறை கிழக்கு வட்டார தலைவர் ரகுபதி, இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரின்கோ ஸ்டான்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில மீனவர் அணி தலைவர் ஜார்ஜ் ராபின்சன், மாநில பொதுச்செயலாளர் பால்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் பால்மணி, செயலாளர் சந்திரமோகன் டேவிட், மாவட்ட பொதுச்செயலாளர் பால்ராஜ், முன்னாள் தலைவர் மரியதாஸ் உள்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.