< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|24 March 2023 12:15 AM IST
தென்காசியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தண்டனை விதித்து கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் சட்டநாதன், சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் உதய கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.