கன்னியாகுமரி
தாழக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|தாழக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆரல்வாய்மொழி:
எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ. போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பணத்தை அதானி, அம்பானி போன்றோக்கு கடனாக வழங்கி பொதுதுறையை நலிவடைய செய்து மக்கள் பணத்தை வீணடித்த மத்திய அரசை கண்டித்து தோவாளை கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் தாழக்குடியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். தாழக்குடி பேரூராட்சி துணைத்தலைவர் எஸ்.என்.ராஜா, தாழக்குடி காங்கிரஸ் தலைவர் டேவிட்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயல் தலைவர் ஜிஜில் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக பிரின்ஸ் எம்.எல்.ஏ., குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஆரல்வாய்மொழி காங்கிரஸ் தலைவர் அஸ்வின் ஆமோஸ், செண்பகராமன்புதூர் காங்கிரஸ் தலைவர் நீலாமணி, வட்டார துணைத்தலைவர் டோமினிக் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட அமைப்பு செயலாளர் ஆரல் சுதாகர் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
----