ராணிப்பேட்டை
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|திமிரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆற்காடு
எல்.ஐ.சி. மற்றும் பாரத ஸ்டேட் வங்கி பங்குத் தொகையை அதானிக்கு தாரை வார்ப்பதாக கூறி மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆற்காடு சட்டமன்ற தொகுதி திமிரி பஜார் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சி.பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார். திமிரி பேரூர் தலைவர் எல்லப்பன், திமிரி வட்டார தலைவர்கள் பி.மண்ணு, லீலா கிருஷ்ணன், விளாபாக்கம் தலைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுக்குழு உறுப்பினர் உமா மகேஸ்வரன் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினார்.
இதில் ஆற்காடு நகர தலைவர் பியாரே ஜான், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆற்காடு ஆனந்தன், சரவணன், காவேரிப்பாக்கம் ஜெயக்குமார் நிர்வாகிகள் ஏகாம்பரம், தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கையோடு கைகோர்ப்போம் நிகழ்ச்சியாக மத்திய அரசின் மக்கள் விரோத செயலை கண்டிக்கும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.