< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|7 March 2023 11:03 PM IST
ஆலங்காயத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வாணியம்பாடி
ஆலங்காயம் பேரூராட்சி மற்றும் ஆலங்காயம் ஒன்றிய காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆலங்காயம் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரபு தலைமை தாங்கினார். நகர தலைவர் எம்.ஆனந்தன், ஒன்றிய தலைவர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு எல்.ஐ.சி. மற்றும் பாரத ஸ்டேட் வங்கி பங்குத் தொகையை அதானிக்கும், அம்பானிக்கும் முதலீடு செய்வதை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாவட்ட பொருளாளர் மகேஷ், மாதனூர் ஒன்றிய தலைவர் சாந்தகுமார், மாநில பொதுச் செயலாளர் எஸ்.சி. துறை வி.சக்தி, கே.ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.