< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|7 Feb 2023 12:15 AM IST
தென்காசியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. நிறுவனங்களில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாத அதானி குழுமத்திற்கு மத்திய அரசு துணை போவதாக கூறி அதனை கண்டித்து தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் சட்டநாதன், மாவட்ட பொருளாளர் முரளிராஜா, சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளிமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.