< Back
மாநில செய்திகள்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
20 Jan 2023 2:48 AM IST

பாளையங்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

பாளையங்கோட்டை:

பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கவர்னரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் பி.வி.டி.ராஜேந்திரன், கவுன்சிலர்கள் அனுராதா சங்கரபாண்டியன், அம்பிகா முத்துதுரை, பொதுச்செயலாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மத்திய மந்திரிஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு, கண்டன உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசு சார்பில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை, நீட் தேர்வுக்கு தடை போன்ற முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அவற்றுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கவில்லை. தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள முக்கிய சட்ட மசோதாக்களை கவர்னர் கிடப்பில் போட்டுள்ளார். எனவே தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், என்றார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்ககுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* இதேபோல் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நெல்லை டவுன் வாகையடி முக்கில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் கவிபாண்டியன், உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்