< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|27 July 2022 11:32 PM IST
ஆற்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார். ஆற்காடு தொகுதி பொறுப்பாளர் மலர், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் நிஷாத் அகமத், நகர தலைவர் கண்ணன், வட்டாரத் தலைவர்கள் வீரப்பா, புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மத்திய அரசை கண்டித்தும், அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினர். பொதுக்குழு உறுப்பினர் விநாயகம் மாவட்ட செயலாளர் பியாரேஜான், மகிளா காங்கிரஸ் தலைவர் சந்திரா உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.