< Back
மாநில செய்திகள்
காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
தென்காசி
மாநில செய்திகள்

காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

தினத்தந்தி
|
25 July 2022 8:52 PM IST

பாவூர்சத்திரத்தில், காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்- பழனி நாடார் எம்.எல்.ஏ. அறிக்கை

சுரண்டை:

தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தென்காசியில் நேற்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தேதி மாற்றம் செய்யப்பட்டு, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணி அளவில் "பாவூர்சத்திரம் காமராஜர் சிலை அருகில்" அமைதி வழி சத்தியாகிரக போராட்டமாக நடைபெறும்.

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை நேஷனல் ஹெரால்ட் வழக்கில், பா.ஜ.க. அரசு பழிவாங்கும் நோக்கத்தில், அமலாக்கத்துறை விசாரணை என்ற பெயரில் அலைகழிப்பதை கண்டித்து நடைபெறும் இந்த போராட்டத்தில் மாவட்ட, வட்டார, நகர, கிராம காங்கிரஸ் கமிட்டி, துணை அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்