< Back
மாநில செய்திகள்
ராஜீவ்காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
பெரம்பலூர்
மாநில செய்திகள்

ராஜீவ்காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

தினத்தந்தி
|
22 May 2023 12:00 AM IST

கவுல்பாளையத்தில் ராஜீவ்காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுரேஷ் தலைமையில், அக்கட்சியினர் பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில், கவுல்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ராஜீவ் காந்தியின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அவர்கள் ராஜீவ் காந்தியை வாழ்த்தி கோஷங்களை எழுப்பியதோடு, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்குவோம் என்ற உறுதி மொழியையும் ஏற்றுக்கொண்டனர். இதில் காங்கிரஸ் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட துணைத்தலைவர் ஆசைத்தம்பி அருணாச்சலம், பொருளாளர் மனோகரன், நகர தலைவர்கள் நல்லுசாமி கவுண்டர் (பெரம்பலூர்), தேவராஜன் (அரும்பாவூர்), வட்டார தலைவர்கள் சின்னசாமி (வேப்பந்தட்டை), பாக்யராஜ் (ஆலத்தூர்) உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்