கன்னியாகுமரி
நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டம்
|நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும் நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடந்தது.
இதற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மண்டல தலைவர்கள் சாந்தி ரோஸ்லின், புகாரி, செல்வன், ஆதிராம், மாவட்ட துணைத்தலைவர்கள் ஐரின்சேகர், நிக்சன், கார்த்திக், தேவசகாயம், வட்டார தலைவர்கள் வைகுண்டதாஸ், ஜெரால்டு கென்னடி, நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் அலெக்ஸ், சேவியர் ஜார்ஜ், மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளர் அபிஜித், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ்டிரமணி மற்றும் நிர்வாகிகள் விக்னேஷ், தங்கம், பிரவின் உள்ளிட்ட காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தையொட்டி வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையில் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
----