< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து திருச்சியில் காங். கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம்
|25 March 2023 6:24 PM IST
ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி,
மோடி பெயரை பயன்படுத்தி அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரை மக்களவையில் இருந்து தகுதிநீக்கம் செய்வதாக மக்களவை செயலகம் நேற்று அறிவித்தது.
இது காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், காங்கிரஸ் சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி சந்திப்பு ரெயில் நிலையத்தில் ஜன சதாப்தி விரைவு ரெயிலை மறித்து அவர்கள் அரைமணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினர். இதனால், அப்பகுதி பரபரப்புடன் கானப்பட்டது.