< Back
மாநில செய்திகள்
ஊத்துக்கோட்டையில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ஊத்துக்கோட்டையில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
28 July 2023 7:00 PM IST

மணிப்பூரில் நடைபெறும் கலவரத்தை கண்டித்தும். பா.ஜ.க. அரசை கண்டித்தும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பாக ஊத்துக்கோட்டையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவரும், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான துரை சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் துணைத் தலைவர் அருண் பிரசாத், நகரத் தலைவர் ஜமாலுதீன் வட்டாரத் தலைவர்கள் பெரியபாளையம் மூர்த்தி, பெரியசாமி, மதன்மோகன், குப்பன், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்