< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
காங்கிரஸ் பூத் கமிட்டி கூட்டம்
|3 Oct 2023 12:30 AM IST
காங்கிரஸ் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
மானாமதுரை
மானாமதுரையில் காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி கூட்டம் மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும் 10 நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், மானாமதுரை, சிவகங்கையில் அனைத்து ெரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதில் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி, வட்டார தலைவர் ஆரோக்கியதாஸ், நகராட்சி கவுன்சிலர் புருஷோத்தமன், தகவல் தொழில்நுட்ப நிர்வாகி பால் நல்லத்துரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.