< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
அரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|21 April 2023 12:30 AM IST
அருர்:
அரூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் வஜ்ஜிரம் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி.தீர்த்தராமன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் நரேந்திரன், மோகன்குமார், ஜெயசங்கர் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட துணை தலைவர்கள் சிவலிங்கம், அப்பாவு, மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் மோகன், நிர்வாகிகள் வைரவன், செல்வம், ஜெயராஜ், பொன்பிரகாசம், வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.