< Back
மாநில செய்திகள்
பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு
அரியலூர்
மாநில செய்திகள்

பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு

தினத்தந்தி
|
29 July 2022 6:53 PM GMT

பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டினர்.

தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளையொட்டி அவரை பற்றிய பல்வேறு தலைப்புகளில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி, அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது. அரியலூர் மாவட்ட கல்வி அலுவலர் மான்விழி தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 12 மாணவர்கள், 33 மாணவிகள் என மொத்தம் 45 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ஒருங்கிணைப்பாளர்களாக தலைமை ஆசிரியர்கள் செயராசு, துரைக்கண்ணுவும், நடுவர்களாக முதுகலை தமிழ் ஆசிரியர்கள் கலைச்செல்வன், சுரேஷ், கலைமாமணியும் செயல்பட்டனர். பேச்சுப்போட்டியில் முதலிடத்தை வரதராஜன்பேட்டை தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியின் பிளஸ்-2 மாணவர் செல்வமும், 2-ம் இடத்தை பொய்யாதநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் பிளஸ்-1 மாணவர் அருண்குமாரும், 3-ம் இடத்தை தென்னூர் அன்னை லூர்து பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 10-ம் வகுப்பு பயிலும் ஜூசஸ் கசின் ரயாலியாவும் பிடித்தனர். அவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் மற்றும் பாராட்டு சான்றிதழும், மாவட்ட கலெக்டரால் விரைவில் வழங்கப்படவுள்ளது.

மேலும் போட்டியில் பங்கேற்ற அரசு பள்ளிகளில் வாரியங்காவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் பிரித்திகாவும், முத்துவாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் பவித்ராவும் சிறப்பு பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படவுள்ளது, என்று தமிழ் வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

மேலும் செய்திகள்