கரூர்
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிக்கு பாராட்டு
|போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கரூர் மாவட்ட சிறு சேமிப்புத்துறை சார்பில் நடத்தப்பட்ட சிறுசேமிப்பு சொற்றொடர் அமைத்தல் போட்டி நடைபெற்றது. இதில் புஞ்சைதோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி கவுசிகா கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். அவருக்கு கரூர் மாவட்ட கலெக்டர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்.அதேபோல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன. இதில் புஞ்சைதோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் விஷ்ணு மாவட்ட அளவிலான உயரம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்று கோப்பை, 1 ஸ்மார்ட் வாட்ச், ரூ.1,500 ஆகியவற்றை பெற்று சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை மாணவ-மாணவிக்கு, மாணவர்கள் முன்னிலையில் தலைமையாசிரியர் வழங்கி பாராட்டினார்.