< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
கராத்தே, சிலம்பம் போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு
|25 May 2022 6:19 PM IST
தூத்துக்குடியில் கராத்தே, சிலம்பம் போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி:
சென்னையில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 15 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடி வெற்றி பெற்றனர். இதே போன்று தூத்துக்குடி வேலவன் வித்யாலயா பள்ளியில் குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம் நடத்திய 3 மணி நேரம் தொடர் சிலம்பம் விளையாட்டில் தூத்துக்குடியை சேர்ந்த 60 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு உலக சாதனை நிகழ்த்தி பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்று உள்ளனர்.
இவர்கள் நேற்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது போலீஸ் சூப்பிரண்டு, மாணவர்கள் மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்தினார். நிகழ்ச்சியில் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர்கள், பயிற்சியாளர்கள், போலீசார் உடன் இருந்தனர்.