< Back
மாநில செய்திகள்
எஸ்.டி.ஈடன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
கடலூர்
மாநில செய்திகள்

எஸ்.டி.ஈடன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

தினத்தந்தி
|
24 Jun 2022 12:13 AM IST

வடலூர் எஸ்.டி.ஈடன் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டினர்.

வடலூர்,

வடலூர் எஸ்.டி.ஈடன் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர் அபிஷேக் 600-க்கு 587 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மாணவி ரேஷ்மா 500-க்கு 484 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தார். இதேபோல் சேத்தியாத்தோப்பில் இயங்கி வரும் இந்த பள்ளி கிளையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் இப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது, இதையடுத்து அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், அவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியா்களுக்கும் தலைமையாசிரியை சுகிர்தா தாமஸ் மற்றும் நிர்வாக இயக்குனர் தீபக் தாமஸ் ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்