< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியில் பங்கேற்கும் சேலம் கைப்பந்து வீராங்கனைகளுக்கு வாழ்த்து
சேலம்
மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியில் பங்கேற்கும் சேலம் கைப்பந்து வீராங்கனைகளுக்கு வாழ்த்து

தினத்தந்தி
|
2 July 2023 1:51 AM IST

முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியில் பங்கேற்கும் சேலம் கைப்பந்து வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

சேலம்:

சென்னையில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவில் விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போட்டியில் சேலம் மாவட்டத்தில் இருந்து 650-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அதன்படி சென்னையில் நடக்கும் கைப்பந்து போட்டியில் பங்கேற்கும் சேலத்தை சேர்ந்த வீராங்கனைகளை வழியனுப்பும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்ட கலெக்டர் கார்மேகம், சேலம் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல் ஆகியோர் கலந்து கொண்டு கைப்பந்து வீராங்கனைகளை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் மற்றும் கைப்பந்து பயிற்சியாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்