திருச்சி
ஜே.இ.இ.-நீட் தேர்வில் வெற்றி பெற்ற சந்தானம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து
|ஜே.இ.இ.-நீட் தேர்வில் வெற்றி பெற்ற சந்தானம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது
திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு நடைபெற்ற ஜே.இ.இ. மெயின் - அட்வான்ஸ்டு மற்றும் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். ஜே.இ.இ. மெயின் அண்டு அட்வான்ஸ்டு தேர்வில் மாணவர்கள் எல்.விட்டல் ராவ் (99.68), ஆர்.பி.தஸ்வந்த் ஸ்ரீ (97.11), கே.செல்வகுமாரன் (96.93) மற்றும் நீட் தேர்வில் மாணவர்கள் எல்.விட்டல் ராவ் (617), ஆர்.மனோஜ் (612) மாணவிகள் வி.எம்..தர்ஷினி (520) எஸ்.காயத்திரி (500) ஆகிய மதிப்பெண்களை பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் செயலர் முனைவர் கோ.மீனா, தலைமை செயல் அதிகாரி கு.சந்திரசேகரன், இயக்குனர் எஸ்.அபர்ணா, சந்தானம் அகாடமி இயக்குனர் வி.ரவிந்தரநாத் குமார், முதல்வர் பத்மா சீனிவாசன், டீன் ஆர்.கணேஷ், துணை முதல்வர்கள் பி.ரேகா, எஸ்.ரேணுகா மற்றும் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியின் முன்னாள் முதல்வர் மற்றும் ஆபரேஷன் ஹெட் முனைவர்.எஸ்.வித்யாலெட்சுமி ஆகியோரும் பாராட்டி பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பள்ளியின் தலைமை செயல் அதிகாரி கு.சந்திரசேகரன் மேற்படிப்பிற்கான வாய்ப்புகளை பற்றியும், அவர்களின் விருப்பமான துறையை சார்ந்த விளக்கத்தையும் அளித்து, எந்த துறையை தேர்வு செய்கின்றோமோ, அதில் முதன்மை பெற்று தலைசிறந்த மாணவர்களாக திகழ வேண்டும் என்று மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.