< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பெற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் - அன்புமணி ராமதாஸ்
|7 Jun 2024 4:12 PM IST
தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பெற்ற நரேந்திர மோடிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
டெல்லியில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் மக்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பெற்ற நரேந்திர மோடி அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்
உங்கள் தலைமையிலான ஆட்சியில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உறுவெடுப்பது உள்ளிட்ட சாதனைகளை படைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.