< Back
மாநில செய்திகள்
காங். மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு மூச்சுத்திணறல் - மருத்துவமனையில் அனுமதி
மாநில செய்திகள்

காங். மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு மூச்சுத்திணறல் - மருத்துவமனையில் அனுமதி

தினத்தந்தி
|
9 Oct 2022 1:55 PM IST

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காந்தி பேரவையின் நிறுவனத்தலைவருமாக இருந்து வருபவர் குமரி அனந்தன். இவருக்கு வயது 90.

இந்த நிலையில், குமரி அனந்தனுக்கு நேற்று இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், குமரி அனந்தன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் குமரி அனந்தனின் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது குமரி அனந்தன் நலமாக இருப்பதாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் செய்திகள்