சிவகங்கை
அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
|அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.
காரைக்குடி,
காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் 75-வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு கல்லூரி தமிழ் உயராய்வு மையம் ந. சுப்புரெட்டியார் கல்வி அறக்கட்டளை சார்பில் கோடி கொடுத்த கொடைஞனும், தேடிக் கொடுத்த அறிஞனும் என்ற தலைப்பில் 2 நாட்கள் பன்னாட்டு கருத்தரங்கு தொடக்க விழா கல்லூரியில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) துரை தலைமை தாங்கினார். கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளரும், தமிழ் துறை இணை பேராசிரியர் சிதம்பரம் விளக்கவுரையாற்றினார். பன்னாட்டு கருத்தரங்க நூலை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி வெளியிட்டு பேசினார். அழகப்பா பல்கலைக்கழக தமிழ் துறைத்தலைவர் ராசாராம் விளக்கவுரையாற்றினார். சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் ஸ்ரீலட்சுமி கருத்துரையாற்றினார். கருத்தரங்கில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் பேராசிரியர் தேசிகனார் மகள் டாக்டர் தாமரை ரூ.75ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை கல்லூரி நூலகத்திற்கு வழங்கினார். கருத்தரங்கத்தை அழகப்பா அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் சிதம்பரம், ந. சுப்புரெட்டியார் 100 அறக்கட்டளை நிறுவனர் ராமலிங்கம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். முடிவில் பன்னாட்டுக் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் நன்றி கூறினார்.