< Back
மாநில செய்திகள்
குளிர்பானம் விற்பதில் மோதல்; 2 பேர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

குளிர்பானம் விற்பதில் மோதல்; 2 பேர் கைது

தினத்தந்தி
|
10 Jun 2022 2:42 PM IST

திருத்தணியில் குளிர்பானம் விற்பனை செய்வதில் மோதலில் ஈடுப்பட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட ம.பொ.சி. சாலை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 49). திருத்தணி பகுதிக்கான குளிர்பான டீலர். அரக்கோணம் பகுதிக்கான டீலராக மோகன் உள்ளார். இவர் திருத்தணியில் உள்ள கடைகளுக்கு குளிர்பானங்களை விற்பனை செய்து வந்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று அரக்கோணம் டீலர் மோகன் திருத்தணியில் உள்ள கடைகளுக்கு குளிர்பானங்களை விற்க கடையில் வேலை செய்யும் ஊழியர்களுடன் வாகனத்தில் வந்தார். திருத்தணி இந்திராநகர் பகுதி அருகே மோகன் வந்த வாகனத்தை வழிமறித்து முருகன் தட்டிக்கேட்டார். இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. மோகனுடன் இருந்த ஊழியர்கள் தாக்கியதில் முருகனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி போலீசார் முருகனை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மோகன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். மோகனுடன் வந்து முருகனை தாக்கிய சோளிங்கர் அடுத்த ஜானகா புரம் பகுதியை சேர்ந்த அரிபாபு ( 31), சோளிங்கர் தாலுகாவுக்கு உட்பட்ட மெத்தவாடை கிராமத்தை சேர்ந்த பாலாஜி (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்