< Back
மாநில செய்திகள்
இருதரப்பினர் இடையே மோதல்; செம்பட்டிவிடுதி அருகே போலீசார் குவிப்பு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

இருதரப்பினர் இடையே மோதல்; செம்பட்டிவிடுதி அருகே போலீசார் குவிப்பு

தினத்தந்தி
|
25 March 2023 11:53 PM IST

இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் செம்பட்டிவிடுதி அருகே போலீசார் குவிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டிவிடுதி அருகே உள்ள வாராப்பூர் மற்றும் புலவன்காடு பகுதிகளை சேர்ந்த வாலிபர்கள் இடையே கடந்த 22-ந் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் ஒருதரப்பு வாலிபரை மற்றொரு தரப்பினர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினி தலைமையில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) உஷா நந்தினி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த வாலிபரை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி ஒரு தரப்பினர் சாலை மறியல் நடத்தப்போவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்