< Back
மாநில செய்திகள்

அரியலூர்
மாநில செய்திகள்
இரு தரப்பினர் இடையே மோதல்; ஒருவர் கைது

8 March 2023 11:17 PM IST
இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் ராஜன்(வயது 37). இவருக்கும், அதை ஊரை சேர்ந்த மணி மகன் தினேஷ்(26) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சின்னவளையம் பஸ் நிறுத்தம் அருகே ராஜன் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த தினேஷ் மற்றும் அதே ஊரை சேர்ந்த தனவேல் மகன் மணிகண்டன், நசையன் மகன் சக்திவேல் ஆகியோர் தினேசை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.