< Back
மாநில செய்திகள்
இரு தரப்பினர் இடையே மோதல்; 7 பேர் மீது வழக்கு
அரியலூர்
மாநில செய்திகள்

இரு தரப்பினர் இடையே மோதல்; 7 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
29 May 2023 12:08 AM IST

இரு தரப்பினர் இடையே மோதல் சம்பவமாக 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே செங்குழி கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் பழனியாண்டி(வயது 85). அதே பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன்(48). உறவினர்களான இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பழனியாண்டியின் வீட்டிற்கு அருகே மதியழகன் நின்று கொண்டு திட்டியதாகவும், அப்போது அங்கு வந்த பழனியாண்டி மற்றும் அவரது உறவினர்கள் கலைஞர், ஜெய்சங்கர், மணிகண்டன் மற்றும் மதியழகன், அவரது உறவினர்கள் கவிதா, கார்த்திகா ஆகியோருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்பு வாய் தகராறு முற்றியபோது ஒருவரை ஒருவர் திட்டி தாக்கி கொண்டனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் பழனியாண்டி மற்றும் மதியழகன் ஆகிய இருவரும் தனித்தனியாக புகார் அளித்தனர். புகார்களின் பேரில் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் இது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்