< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
இருதரப்பினர் இடையே மோதல்; 6 பேர் கைது
|21 March 2023 12:25 AM IST
இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வடகடல் காலனி தெருவை சேர்ந்த கணபதி மகன்கள் ரவி (வயது 53), ராஜேந்திரன்(49). இவர்கள் 2 பேருக்கும் இடையே இடப்பிரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் இவர்கள் 2 குடும்பத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் மீது உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.