திருச்சி
இருதரப்பினரிடையே மோதல்; 10 பேர் கைது
|இருதரப்பினரிடையே மோதல் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
முசிறி:
முசிறியை அடுத்த கருப்பம்பட்டி புது வாய்க்கால் அருகில் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியை சேர்ந்த 3 பேர் வேகமாக சென்றதாகவும், இது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கருப்பம்பட்டி குடித்தெரு பகுதியை சேர்ந்த செல்வமணியின் மனைவி காந்தாமணி(வயது 43) கொடுத்த புகாரின் பேரில் ஏவூர் பகுதியை சேர்ந்த தீபன்(19), அன்புராஜா(32), அரவிந்தன், அமிர்தன், குணால், தினேஷ்கோபி, சவுந்தரராஜன் ஆகியோர் மீதும், இதே பிரச்சினை குறித்து ஏவூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் மகன் தீபன் கொடுத்த புகாரின் பேரில் விக்னேஷ்(23), தமிழரசன், தங்கராஜ்(20), கணேசன்(48), கதிர்வேல்(43), மகேஷ்குமார்(31), பிரசாந்த்(29) ஆகிய 7 பேர் மீதும் என மொத்தம் 14 பேர் மீது முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு யாஸ்மின் வழக்குப்பதிவு செய்துள்ளார். மேலும் இதில் இருதரப்பை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் ஏவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.