< Back
மாநில செய்திகள்
பஸ்சில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்
வேலூர்
மாநில செய்திகள்

பஸ்சில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

தினத்தந்தி
|
6 July 2023 11:17 PM IST

பேரணாம்பட்டில் பஸ்சில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

பேரணாம்பட்டு வழியாக ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வேலூர் பறக்கும் படை தாசில்தார் விநாயகமூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும் படை தாசில்தார் விநாயக மூர்த்தி மற்றும் வருவாய்த் துறையினர் பேரணாம்பட்டு - வீ.கோட்டா ரோடு புளியமரம் பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக சென்ற கர்நாடக அரசு பஸ்சில் சுமார் 400 கிலோ எடை கொண்ட 9 மூட்டை ரேஷன் அரிசியை கடத்தல் ஆசாமிகள் ஏற்றிக்கொண்டிருந்தனர்.

அவர்கள் அதிகாரிகளை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றி குடியாத்தம் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்