< Back
மாநில செய்திகள்
பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

தினத்தந்தி
|
12 Feb 2023 12:15 AM IST

களியக்காவிளையில் கடையில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

களியக்காவிளை,

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலர் ரமாதேவி தலைமையில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் காய்கறி சந்தை, மீன் சந்தை ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது களியக்காவிளை மார்க்கெட் பகுதியில் உள்ள மொத்த விற்பனை நிலையத்தில் 360 கிலோ பிளாஸ்டிக் பைகள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ.50,000 அபராதம் விதித்தனர். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அபராதத்தை செலுத்தவில்லை என்றால் கடைக்கு சீல் வைக்கப்படும் என நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்