< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
|19 Sept 2022 1:44 AM IST
18 கடைகளில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன
பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர்(பொறுப்பு) குமரேசன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் பரமசிவம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பாபநாசம் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 18 கடைகளில் பயன்பாட்டில் இருந்தது கண்டறியப்பட்டது. இதனையொட்டி அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.24 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.