சிவகங்கை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
|தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதையொட்டி பஸ் நிலையம், காந்தி சிலை, மதுரை ரோடு, புதுக்கோட்டை ரோடு, அண்ணா சிலை, சிவகங்கை சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடை, மளிகை கடைகள், பேக்கரிகள் மற்றும் பழக்கடைகளில் தடை செய்யப்பட்ட 12 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழக அரசால் 14 வகை பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் பயன்படுத்துவதோ, விற்பனை செய்வதோ கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும், கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் கூறினார்.