< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
லாட்டரி சீட்டு பறிமுதல்; 2 பேர் கைது
|8 Aug 2023 12:30 AM IST
லாட்டரி சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் இருந்து தென்காசிக்கு வந்த பஸ்சில் போலீசார் சோதனை செய்தனர். அதில் சந்தேகம்படும்படியாக பெண் உள்பட 2 பேர் இருந்தனர். அவர்களிடம் சோதனை செய்தபோது அவர்கள் மறைத்து வைத்து இருந்த தடைசெய்யப்பட்ட ரூ.34,800 மதிப்புள்ள கேரள லாட்டரி சீட்டுகள் இருப்பதை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். அவர்கள் 2 பேரும் தென்காசியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி சித்ரா (வயது 60), காசிவிஸ்வநாதன் மகன் முத்துகிருஷ்ணன் (45) என்பதும், கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி விற்பனைக்கு கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.