< Back
மாநில செய்திகள்
மது பாட்டில்கள் பறிமுதல்; பெண் கைது
அரியலூர்
மாநில செய்திகள்

மது பாட்டில்கள் பறிமுதல்; பெண் கைது

தினத்தந்தி
|
17 Jun 2023 12:40 AM IST

மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு பெண் கைது செய்யப்பட்டார்.

தா.பழூர் அருகே உள்ள அன்னங்காரம்பேட்டை கிராமத்தை சேர்ந்த அருள்வேந்தனின் மனைவி அமுதா(வயது 52). இவரது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக தா.பழூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் அமுதாவின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அமுதாவை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்