< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
மதுபாட்டில்கள் பறிமுதல்; 2 பேர் மீது வழக்கு
|16 July 2023 12:31 AM IST
மானூர் அருகே மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பார் உரிமையாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
மானூர்:
மானூர் அருகே உள்ள எட்டாங்குளம் பகுதியில் பாருடன் இணைந்த டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மதுபாரில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக மது விற்பனை நடப்பதாக மானூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) உதயகுமார் மற்றும் போலீசார் நேற்று காலை மதுபாருக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த பீரோ மற்றும் பிரிட்ஜில் 12 பீர் பாட்டில்களும், 58 மது பாட்டில்களும் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பீரோ, பிரிட்ஜ் மற்றும் மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக மதுபார் உரிமையாளரான நித்தின் மற்றும் விற்பனையாளர் மோசஸ் ராஜ், (வயது 54) ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.