< Back
மாநில செய்திகள்
மூட்டை, மூட்டையாக குட்கா பொருட்கள் பறிமுதல்
தர்மபுரி
மாநில செய்திகள்

மூட்டை, மூட்டையாக குட்கா பொருட்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
17 Jun 2023 12:15 AM IST

காரிமங்கலம் அருகே மூட்டை, மூட்டையாக குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூரூவில் இருந்து கடத்தி வரப்பட்டது அம்பலமாகி உள்ளது.

காரிமங்கலம்

வாகன சோதனை

கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் இருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம் வழியாக கேரளா மாநிலத்திற்கு போதை பொருட்களை சமூக விரோதிகள் கடத்துவதாக தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதத்திற்க்கு ரகசிய தகவல்கிடைத்தது. தொடர்ந்து அகரம் பிரிவு சாலை, மொரப்பூர் பிரிவு சாலை, கும்பாரஅள்ளி சோதனை சாவடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது கும்பாரஅள்ளி சோதனை சாவடியில் காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முனுசாமி மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

100 மூட்டை பறிமுதல்

பெங்களூரில் இருந்து வந்த சொகுசு காரை நிறுத்தினர். சந்தேகத்தின் பேரில் போலீசார் காரின் அருகில் சென்ற போது டிரைவர் தப்பி ஓட்டம் பிடித்தார். போலீசார் காரை சோதனை செய்தபோது மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் இருப்பதைகண்டறிந்தனர்.

இதில் 100 மூட்டைகளில் சுமார் ரூ.3.23 லட்சம் மதிப்புடைய போதை பொருட்களையும், சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். மூட்டை, மூட்டையாக குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்