கோயம்புத்தூர்
1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
|கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ரேஷன் அரிசி
பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தனுக்கு வடக்குகாடு பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் வடக்குகாடு-கொழிஞ்சாம்பாறை ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அரிசி மூட்டைகளை ஒருவர் கேரள பதிவு எண் கொண்ட ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்தார். உடனே சந்தேகத்தின் பேரில் போலீசார் அரிசியை சோதனை செய்ததில், ரேஷன் அரிசி என்பது தெரியவந்தது.
கைது
இதையடுத்து டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 35) என்பது தெரியவந்தது. மேலும் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி, கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் தலா 50 கிலோ எடை கொண்ட 28 மூட்டைகளில் இருந்த 1,400 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.