கன்னியாகுமரி
1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
|1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
புதுக்கடை:
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கேரளாவுக்கு கடத்தும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடற்கரை கிராமங்களில் இருந்து அதிகளவில் ரேஷன் பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்காக மாவட்ட வருவாய்த்துறையினர் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோர் தீவிர சோதனை நடத்தி ரேஷன் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலர் வயோலாபாய் தலைமையிலான வருவாய்த்துறையினர் இனயம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஹெலன் நகர் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் மூடை மூடையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அங்கிருந்து 1½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர், அவற்றை காப்பிக்காடு அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.