< Back
மாநில செய்திகள்
வீட்டுவசதி வாரிய பொருட்கள் ஜப்தி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

வீட்டுவசதி வாரிய பொருட்கள் ஜப்தி

தினத்தந்தி
|
6 April 2023 6:45 PM GMT

வீட்டுவசதி வாரிய பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டது.

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ராக்கம்மாள். இவருக்கு சொந்தமான ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள 1.37 ஏக்கர் நிலத்தை வீட்டு வசதி வாரியம் கடந்த 1997-ம் ஆண்டு கையகப்படுத்தியது. இதற்காக அப்போது ரூ.5 ஆயிரம் வீதம் ஒரு செண்ட் நிலத்திற்கு வழங்குவதாக தெரிவித்த நிலையில் இதுவரை அதற்கான பணம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர், ராமநாதபுரம் சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிவில், ராக்கம்மாளுக்கு தரவேண்டிய அசல் தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.39 லட்சத்தினை வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த தொகையை வழங்காத நிலையில் ராக்கம்மாள் நிறைவேறுதல் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் உரிய நிவாரண தொகை வழங்காத வீட்டு வசதி வாரிய பொருட்களை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். நேற்று காலை ராமநாதபுரம் சாலைத்தெரு பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் உள்ள கணினி உள்ளிட்ட பொருட்களை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்