< Back
மாநில செய்திகள்
கிரானைட் கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

கிரானைட் கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

தினத்தந்தி
|
24 July 2022 10:51 PM IST

கிருஷ்ணகிரி அருகே கிரானைட் கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு உதவி இயக்குனர் பொன்னுமணி மற்றும் அதிகாரிகள் மகராஜகடை, பாகிமானூர் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் இருந்த 2 லாரிகளை சோதனை செய்த போது ஒரு லாரியில் 2 டன் எடை கொண்ட ஒரு கிரானைட் கல்லும், மற்றொரு லாரியில் 5 டன் எடை கொண்ட 2 கிரானைட் கல்லும் கடத்தி வந்தது தெரிய வந்தது. இது குறித்து அதிகாரி பொன்னுமணி மகராஜகடை மற்றும் பர்கூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் 2 லாரிகளையும், கிரானைட் கற்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கிரானைட் கற்களின் மதிப்பு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

மேலும் செய்திகள்