< Back
மாநில செய்திகள்
வேனில் கடத்த முயன்ற ரூ.3 லட்சம் குட்கா பறிமுதல்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

வேனில் கடத்த முயன்ற ரூ.3 லட்சம் குட்கா பறிமுதல்

தினத்தந்தி
|
22 July 2022 9:42 PM IST

ஓசூர் வழியாக சென்னைக்கு வேனில் கடத்த முயன்ற ரூ.3 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓசூர்*

ஓசூர் வழியாக சென்னைக்கு வேனில் கடத்த முயன்ற ரூ.3 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி ஒரு வேன் வந்தது. போலீசார் அந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் 368 கிலோ தடை செய்யப்பட்ட ரூ.3 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. இதையடுத்து குட்கா மற்றும் டெம்போ டிராவலர் வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வேனில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

அப்போது பெங்களூரு கங்கேரி தாலுகா ராமஹள்ளி பீமனகுப்பா கிராமத்தை சேர்ந்த டிரைவர் சேத்தன் (வயது 26), பெங்களூரு அருகே நெலமங்களா சிவன்னபுரா கிராமத்தை சேர்ந்த மாற்று டிரைவர் லோகேஷ் (23) ஆகியோர் என்பதும், பெங்களூருவில் இருந்து குட்காவை சென்னைக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்