< Back
மாநில செய்திகள்
பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு   காரில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு காரில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
13 Jun 2022 10:51 PM IST

பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு ஓசூர் வழியாக காரில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர்:

பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு ஓசூர் வழியாக காரில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

வாகன சோதனை

ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் 93 கிலோ குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே தென்கலை கிராமத்தை சேர்ந்த முகமது கனி (வயது 35) என்பதும், பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக திருச்சிக்கு புகையிலை பொருட்களை கடத்தியது தெரியவந்தது. உடன் வந்த ரஹீம் என்பவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடி விட்டதும் தெரிந்தது.

டிரைவர் கைது

இதையடுத்து டிரைவர் முகமது கனியை போலீசார் கைது செய்தனர். மேலும் கார், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தப்பி ஓடிய ரஹீமை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தொடர்ந்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்