< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
2 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
|22 Oct 2023 1:00 AM IST
தேன்கனிக்கோட்டை உழவர் சந்தையில் 2 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் நடேசன் தலைமையில் துப்புரவு மேற்பார்வையாளர் வனிதா, பிரபாகர் அடங்கிய குழுவினர் உழவர் சந்தையில் உள்ள காய்கறி கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது சந்தையில் 2 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பை பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு மொத்தம் ரூ.1,450 அபராதம் வசூலிக்கப்பட்டது.